Saturday, 28 September 2024
Monday, 1 July 2024
Monday, 30 October 2023
ராதா கிருஷ்ணா நாட்டிய கல்லூரி கலை விழா
கல்லூரியின் அதிபரும் கோகுலம் சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகருமான ஸ்ரீமதி நந்தா ராணி தேவி அம்மையார், சர்வதேச கிருஷ்ண பக்தி கழகத்தின் இலங்கை கிளை தலைவர் மகா கர்த்ததாஸ் ஸ்வாமிகள் மற்றும் பரத நாட்டிய ஆசிரியை துஷ்யந்தி பிரகலாதன் ஆகியோர் .
Friday, 15 September 2023
College Stars
College Stars - கல்லூரி நட்சத்திரங்கள்
...................................
தெற்காசியாவின் முதல் வானொலியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் . தனது வரலாற்றில் ஒலிபரப்பாளர்கள் உட்பட பல புகழ்பெற்ற கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது .
அந்த வரிசையில் பாடசாலை மட்டத்தில் பாடும் திறமையுள்ள மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களை நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செய்யும் விதமாக புதிய நிகழ்ச்சி கல்லூரி நட்சத்திரங்கள் என்ற பெயரில் மாதாந்தம் நடைபெறுகிறது.
முதல் நேரடி ஒலிபரப்பு 2023 ஜூலை 26 ஆம் திகதி கொழும்பு பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
செப்டம்பர் 7ஆம் தேதி இரண்டாவது நிகழ்ச்சி கொட்டாஞ்சேனை கலைமகள் தமிழ் வித்யாலயத்தில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் இக்பால் ஜெகன் தலைமையிலான சித்தாரா இசைக் குழுவினரின் இசையில் பாடினார்கள்.
பாடசாலை அதிபர் இலக்கியப் புலவர் ஹாசிம் உமர் இவர்களோடு மாணவிகள் சகிதம் தயாரிப்பாளர் நிஷாந்தி ரணதுங்க மற்றும் நான்செப்டம்பர் 07 ஆம் திகதி 12 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்ச்சியை 104.7 மற்றும் 104.9 ஆகிய தென்றல் வரிசைகளில் நேரடியாக கேட்டு மகிழலாம். நிகழ்ச்சி தயாரிப்பாளர் நிஷாந்தி ரணத்துங்க.நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நாகபூஷணி .
Saturday, 8 July 2023
கலாசங்கமம் இசை நிகழ்ச்சி
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் சேவையின் கலா சங்கமம் மாதாந்த இசை நிகழ்ச்சி 6 / 7 / 2023 வியாழன் மாலை இரண்டு மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவை பணிப்பாளர் இரத்தின சிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது .
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நளின் குமார நிஸ்ஸங்க மற்றும் நிகழ்ச்சிப் பிரிவு
பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி. மயூரி அபேசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் தெஹிவளை IWA campus அதிபர் Dr. M.H.M முனாசிக் மற்றும் வெள்ளவத்தை கந்தூரி அதிபர் திரு. ருஷ்தி சுஹைப் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர் .
மயூரி அபேசிங்க அவர்களுக்கு நான் பொன்னாடை போர்த்திய போது ....

















































