Wednesday, 25 October 2017

தூவானம்

     
வரும் 28-10-2017 சனிக்கிழமை அன்று உங்கள் வசந்தம் தொலைக்காட்சியில் தூவானம் நிகழ்ச்சியில் உங்களோடு நான்... சிறப்பு விருந்தினராக புதியதலைமுறை, இவள் நாளிதழின் பொறுப்பாசிரியருமான பாரதி அவர்கள். இலக்கியம் சார்ந்த உரையாடல்களோடு உங்கள் முன்னே நாங்கள்.. 

வழக்கம் போல் சுவையான, சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்போடு நான் உங்கள் ப்ரியமான நாகப்பூஷணி... நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்





Monday, 23 October 2017

குரு பிரதீபா பிரபா 2017



               கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 23/10/2017 காலை 10.30 இற்கு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தலைமையில் பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட அதிபர்களும் ஆசிரியர் களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். மக்கள் வங்கி மற்றும் Rainco,future minds  ஆகிய வர்த்தக நிறுவனங்கள் அனுசரணையும் அன்பளிப்பும் வழங்கின.

Thursday, 19 October 2017

அகில இலங்கை தமிழ் தின போட்டி விருது வழங்கும் விழா

               அகில இலங்கை தமிழ் தின போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா 14/10/2017 சனிக்கிழமை காலை யாழ் இந்து கல்லூரியில் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்றது.