Thursday, 1 October 2020

தூவானம் முதல் பார்வை வெளியீடு

 *தூவானம் முதல் பார்வை வெளியீடு*



வசந்தம் தொலைக்காட்சியில் அஸ்மின்  தயாரிக்கும் தேசிய விருது பெற்ற தொலைக்காட்சி கலை ,இலக்கிய  சஞ்சிகை நிகழ்ச்சியான தூவானத்தின் முதல் பார்வை வெளியீடு இன்று சுயாதீன தொலைக்காட்சி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 



முதல் பார்வையினை  தயாரிப்பாளர் வழங்கி வைக்க நிகழ்ச்சி பிரிவு பிரதி பொதுமுகாமையாளர் சரத்குமார பெரேரா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

 




அருகே  தொலைக்காட்சி முகாமையாளர் கே.எஸ்.கோணேஸ், சிரேஸ்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகபூஷணி கருப்பையா, சிரேஸ்ட கணனி வரைகலைஞர் சான் ரத்னாயக்க ஆகியோரையும் படத்தில் காணலாம்.







*

Saturday, 22 February 2020

கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில்

13/02/2020 அன்று தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கலைவிழா நடைபெற்றது.

பிரதம அதிதியாக கலந்துகொண்டு விழாவை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.








மகிழ்ச்சியான தருணங்கள....
அருகில் இருப்பவர் தமிழ் பிரிவின் அதிபர் திருமதி.Y.சிவபாலன்.


https://m.facebook.com/story.php?story_fbid=1507060519445342&id=100004242247102&sfnsn=mo


Sunday, 16 February 2020

         வானொலி
 அரச விருது விழா 2020
**************************
இலங்கை கலாசார அமைச்சு நடத்திய வானொலி
 அரச விருது விழா உலக வானொலி தினமான february 13இல் எல்பின்ஸ்டன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

உலக அறிவிப்பாளர் திரு.அப்துல் ஹமீது வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சிறந்த அறிவிப்பாளர் விருது எனக்கு வழங்கப்பட்டது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் ,சிங்கள அறிவிப்பாளர்கள் பலர் விருது வென்றனர்.


Wednesday, 18 December 2019

இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 8ஆவது ஜனாதிபதி தேர்தல் முடிவு விசேட ஒலிபரப்பு.


2019 November 16
தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணியில் சிங்கள மற்றும் ஆங்கில அறிவிப்பாளர்களுடன் நான்.

Wednesday, 18 September 2019

அலரி மாளிகையில்...
18/09/2019 இன்றைய தினம்4117 (வெளிவாரி) பயிலுனர் 
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் தேசிய கொள்கைகள்,பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞரஇளைஞர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் நானும் சகோதர மொழி அறிவிப்பாளர் சேனானியும்...

நிகழ்ச்சித்தொகுப்பில்...

Monday, 9 September 2019

விருது

02/09/2019  இந்து கலாசார அமைச்சர் கௌரவ மனோகணேஷன் அவர்கள் கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் விழா தாமரைத்தடாக கலையரங்கில்.....
அமைச்சர் மனோகணேஷன் அவர்களிடமிருந்து "கலைச்சுடர்" விருதினை நான் பெற்றுக்கொண்டபோது....

விழா மேடையில் இலங்கையின் பிரபல பாடகர் முத்தழகும் பாடகியும் எனதருமை சங்கீத ஆசிரியருமான ஜெகதேவி விக்னேஷ்வரன் அவர்களும்..

விருது பெற்ற பிரபல நடிகை தொலைக்காட்சிப்புகழ் ரஞ்சனி ராஜ்மோகனுடன்...

விருது பெற்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை தயாரிப்பாளர் ஜெயந்தி ஜெய்சங்கருடன் நாங்கள்...

Monday, 29 July 2019

அறிவு கணிப்பு போட்டி

இலங்கை மின்சார சபை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,கல்வித் திணைக்களம் ஆகியன இணைந்து நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடத்தும் அறிவுக் கணிப்புப் போட்டித் தொடர்.
26/07/2019 வெள்ளியன்று பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

Thursday, 14 February 2019

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,இலங்கை மின்சார சபை மற்றும் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியாக பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் மாபெரும் வினா விடை போட்டி நிகழ்ச்சி
அறிவொளி -திசை தோறும் ஒளிரும் தேசத்தின் வெளிச்சம்.
பெப்ரவரி 04 _2019 நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


நெடுந்தாரகையில் எமது பயணம்...


வரும் வழியில் ..ஒல்லாந்தர் கோட்டையில்




நிகழ்ச்சி தயாரிப்பாளர் சிவசங்கர் கணேஷ் மற்றும் அறிவிப்பாளர் அஹமட் நசீர் ஆகியோருடன் நான்.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் அனுஷாவுடன்.

நிகழ்ச்சி சிறப்பாக முடிவுற்ற மகிழ்ச்சியுடன் மீண்டும் நெடுந்தாரகையில் கரை நோக்கி...