Sunday 22 March 2015

என் தந்தை

இன்பத்தமிழ் நயம் ஏற்றமிகு செய்யுள்கள்
இளவயதில் கற்றுத்தந்த நல்லாசான் 
எண்ணக் குமுறலொடு எல்லையற்ற 
நகைச்சுவையும் எப்போதும் 
பகிர்ந்துகொண்ட ஒரு நண்பன்

துன்பசாயலொன்று முகத்திலே 
கண்டிட்டால் தயங்காமல் 
தட்டிகொடுப்பதில் மந்திரி 
சின்னத்தீங்கேனும் சிந்தையில் கொள்ளாத
செப்பமுறு உயர் பண்பில் தெய்வம்
கண்ணனவன் பாரதியின் கருத்தில் 
நிறைந்தாற்போல் நண்பனாய் மந்திரியாய்
நல்லாசானாய் என் மனதில் குடியிருக்கும்
இறவாத உறவு.

2 comments:

  1. முத்தமிழ் கவியே வருக,
    முக்கனி சுவையும் தருக
    இந்த வலைதளம் தங்களை
    இருகாரம் கூப்பி அன்போடு வரவேற்கிறது..!
    ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது
    தந்தையின் கவிதை அருமை
    தொடரட்டும் உங்கள் இலக்கியப்பணி
    இலக்கிய உள்ளங்களுக்கு நீங்கள்
    இதயக்கனி வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. ungal urchagamootum vaarthaigale enaku ooka marunthu.

      Delete