Saturday, 5 December 2015

கைப்பனிப்பொருள் கண்காட்சி

தேசிய  அருங்கலைகள்பேரவையும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சும் இணைந்து கொழும்பில் நடத்திய  கைப்பணிப்பொருள் கண்காட்சி
  


Wednesday, 25 November 2015

இளைஞர் சேவைகள் மன்றம்


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று [25/11/2015] இளையோர் மட்டத்தில் நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவிப்பாளர், பேச்சாளர் திறன் காண் போட்டிகளுக்கு மத்தியஸ்த்தர்களாக கடமையாற்றியபோது.    


Monday, 26 October 2015

கண்டி கலை இலக்கிய விழா

கண்டியில் கலை இலக்கிய விழா....
தமிழ்ச் சேவையின் சரஸ்வதி பூஜை விழா
இலங்கை வானொலி கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவை வருடாந்தம் நடத்தப்படும் சரஸ்வதி பூஜை 22.10.2015 அன்று மிகச் சிறப்பாக நடைப்பெற்று.  6 ஆம் கலையகத்தில் தமிழ்சேவை ஆணையர் ஆர். கணபதிப்பிள்ளை தலைமையில் நடைப்பெற்றது.

வீரகேசரியில் வெளிவந்த கட்டுரை

30.11.2013 அன்று வீரகேசரி பத்திரிக்கையில் எனது கவிதை தொகுப்பான "நெற்றிக்கண்" நூலை மதிப்பிட்டு விமர்சித்து வெளிவந்த கட்டுரை.

Wednesday, 14 October 2015

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்

              இலங்கை ஒலிபரப்பு கூட்டு த்தாபனத்தின் ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்" என்ற நூல் பாகம் -1 அக்டோபர் 11/2015 அன்று வெளியிடப்பட்டது. இந்த நூலில் 50 அறிவிப்பாளர்களைப் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது.

Friday, 9 October 2015

குரு பிரதிபா பிரபா நடத்திய தேசிய பெருவிழா

         
     ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை "குரு பிரதிபா" 2015 நடத்திய.  உலக ஆசிரியர் தினத்துக்கு இணையாக கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற இலங்கை ஆசிரியர் பெருந்தகைகளை கௌரவிக்கும் தேசிய பெருவிழாவில் கலந்து கொண்டபோது...

Thursday, 3 September 2015


சிறுவர் சித்திரக் கண்காட்சி

சிறுவர் சித்திரக் கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் 2015 இன்று (01/09/2015) கலாபவனத்தில் இடம் பெற்றபோது...
என்னுடன் அறிவிப்பாளர் சமிலா.Sunday, 30 August 2015

பொதுத்தேர்தல்.....

                                பொதுத்தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் விசேஷ ஒலிபரப்பு கலையகத்தில்
                               அறிவிப்பாளர்கள்  மது, தக்கீஷன், ஷெரிபாவுடன் நான். 

Wednesday, 8 July 2015

Thoovanamவசந்தம் தொலைக்காட்சியின் தூவானம்  நிகழ்ச்சியில் பங்கு கொண்ட நூலகவியலாளர் திரு.   N. செல்வராஜா மற்றும்  கலைஞர்   பிரதீபனுடன் நானும் தயாரிப்பாளர்  அஸ்மினும். 

Tuesday, 23 June 2015

 இன்று விடியும் வேளை நிகழ்ச்சியில்....
இலங்கையில் பிறந்து பப்புவாநியுகினியில் வைத்தியராகக் டடமையாற்றி சிறந்த வைத்திய சேவைக்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் விருதுபெற்ற   Dr. ஆதித்ததன் அவரது பெற்றோருடன். அருகே நானும்  அறிவிப்பாளர் ராதிகாவும். 

Tuesday, 9 June 2015

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்


இன்னும் பரத விற்பன்னர்களும்.
பிரபல கலைஞர் பாடகி வனஜா ஸ்ரீனிவாசன் அவர்களும்

Thoovanam

வசந்தத்தில்.... 

Thursday, 14 May 2015

Sunday, 10 May 2015

நூல் வெளியிட்டு விழா


மூத்த  ஒலிபரப்பாளர் திரு. மதியழகன் அவர்களது நடிகமணி வி. வி. வைரமுத்து நூல் வெளியீட்டு விழாவில்.... 

தென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014]


தென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014] நான்...


Sunday, 5 April 2015

Thoovanam

உங்களுடன்.....

வெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி

Print Friendly and PDF

ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர் குற்றவாளியாக்கி குதறுகின்ற நிலை. யார் யாரை திருத்துவது யார் யாருக்கு புத்தி புகட்டுவது என சமூகநிலை குறித்து வெதும்புகின்றார் இலங்கையின் ஒலி, ஒளிபரப்புத்துறையில் பிரபல மூத்த பெண் அறிவிப்பாளினியான நாகபூசனி.


வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளினியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அறிவிப்பாளருமான இவர் பெயர்சூட்டக்கூடிய ஒருவராக இத்துறையில் தடம் பதித்துள்ளார். அறிவிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், விரிவுரையாளர் என்ற பன்முகங்களைக்கொண்ட இவர் சிறந்த நடிகையாகவும் பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார். அண்மையில் அவரை சந்தித்தபோது எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை துருவம் வாசகர்களுக்காக‌  தருகின்றோம்.

Sunday, 22 March 2015

என் தந்தை

இன்பத்தமிழ் நயம் ஏற்றமிகு செய்யுள்கள்
இளவயதில் கற்றுத்தந்த நல்லாசான் 
எண்ணக் குமுறலொடு எல்லையற்ற 
நகைச்சுவையும் எப்போதும் 
பகிர்ந்துகொண்ட ஒரு நண்பன்