Wednesday, 25 October 2017

தூவானம்

     
வரும் 28-10-2017 சனிக்கிழமை அன்று உங்கள் வசந்தம் தொலைக்காட்சியில் தூவானம் நிகழ்ச்சியில் உங்களோடு நான்... சிறப்பு விருந்தினராக புதியதலைமுறை, இவள் நாளிதழின் பொறுப்பாசிரியருமான பாரதி அவர்கள். இலக்கியம் சார்ந்த உரையாடல்களோடு உங்கள் முன்னே நாங்கள்.. 

வழக்கம் போல் சுவையான, சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்போடு நான் உங்கள் ப்ரியமான நாகப்பூஷணி... நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்





Monday, 23 October 2017

குரு பிரதீபா பிரபா 2017



               கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 23/10/2017 காலை 10.30 இற்கு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தலைமையில் பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட அதிபர்களும் ஆசிரியர் களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். மக்கள் வங்கி மற்றும் Rainco,future minds  ஆகிய வர்த்தக நிறுவனங்கள் அனுசரணையும் அன்பளிப்பும் வழங்கின.

Thursday, 19 October 2017

அகில இலங்கை தமிழ் தின போட்டி விருது வழங்கும் விழா

               அகில இலங்கை தமிழ் தின போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா 14/10/2017 சனிக்கிழமை காலை யாழ் இந்து கல்லூரியில் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்றது.






Thursday, 29 June 2017

விருது வழங்கும் வைபவம்


  மூன்றாம் தமிழ்....



இன்று ஜூன்  29 கொழும்பு டவர் மண்டப திரையரங்கு மன்றத்தில்
பாடசாலைகள் மட்டத்தில் தேசிய நாடாகப்போட்டியில் வெற்றிபெற்ற நாடகம்,அரங்கமைப்பு, சிறந்த இசையமைப்பு,சிறந்த தயாரிப்பு,சிறந்த நெறியாள்கை,சிறந்த நடிகை,நடிகர்,மற்றும் துணை நடிகை ,நடிகர்,சிறந்த ஒப்பனையாளர் ஆகியோருக்கு விருது வழங்கும் வைபவத்தில் நானும் சிங்கள அறிவிப்பாளர் குமாரியும்.

Friday, 31 March 2017

அரச நாடக விழா 2017'' பரிசளிப்பு விழா

   



அரச நாடக விழா 2017'' பரிசளிப்பு விழா 


                  உலக நாடக தினத்தையொட்டி 45 ஆவது முறையாக கலாசார அமைச்சினால் கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் மார்ச் 27 நடத்தப்பட்ட ''நாடக விழா 2017'' பரிசளிப்பு விழாவில் சகோதர மொழி  அறிவிப்பாளருடன் நான்....

Monday, 23 January 2017

Thoovanam/ Vasantham tv


சுகாதார அமைச்சினால் தாதியர் சேவைக்கு நியமனம்

 சுகாதார அமைச்சினால் தாதியர்  சேவைக்கு நியமனம் வழங்கும் நிகழ்ச்சி   23 /01/2017
அலரி மாளிகையில்  இடம்பெற்றது. நிகழ்ச்சி தொகுப்பில் நானும் சிங்கள அறிவிப்பாளர் Dhammika  வும்.

Monday, 5 December 2016

இலங்கை தமிழ் கலைஞர் சங்க" அங்குரார்ப்பண நிகழ்வு

                04/12/2016 ஞாயிறு மாலை கொழும்பு வீரமைலன் மண்டபத்தில் "இலங்கை தமிழ் கலைஞர் சங்க" அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

             அரச கரும மொழிகள் கௌரவ  அமைச்சர் மனோகணேஷன் பிரதம  அதிதியாகவும் மேல்  மாகாண பா.உ திரு. குரு சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  இந்நிகழ்ச்சியில் 16கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். 200இற்கு மேற்பட்ட கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் பங்கேற்ற  இந்த  வைபவம் கலைஞர்களிடம் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது.
 இலங்கை தமிழ் கலைஞர் சம்மேளனம் சிறப்பு மிக்க சேவைகளை முனனெடுக்க உறுப்பினர்கள் அனைவரும் நேர்மையுடன் செயலாற்ற தயாராக இருப்பதாக உறுதி வழங்கினார்கள்.